உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு வீட்டில் ஒரே பெயரில் இரு மின் இணைப்புகள் இருந்தால் ஒன்றாக்கி கூடுதல் கட்டணம் வசூல்

ஒரு வீட்டில் ஒரே பெயரில் இரு மின் இணைப்புகள் இருந்தால் ஒன்றாக்கி கூடுதல் கட்டணம் வசூல்

காரியாபட்டி: காரியாபட்டியில் ஒரு வீட்டில் ஒரே பெயரில் இரு மின் இணைப்புகள் இருந்தால் ஒரு இணைப்பாக்கி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் நுகர்வோர் சிரமத்தில் உள்ளனர். ஒரு வீட்டில் ஒரே பெயரில் இரண்டு அதற்கு மேல் இணைப்புகள் இருந்தால் அதனை ஒரு இணைப்பாக்கி கட்டணம் வசூலிக்க, 6 மாதங்களுக்கு முன் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மக்கள் கடும் தெரிவித்ததால் அரசு நிறுத்தி வைத்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் கணக்கெடுக்கும் பணி நடந்தது. காரியாபட்டியில் ஒரு சில வீடுகளில் ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேல் இருந்த இணைப்புகளை ஒன்றாக்கி கட்டணம் வசூலிக்கின்றனர். நுகர்வோருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. ரூ. 150, 200 மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், திடீரென கூடுதல் கட்டணத்தால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நர்கீஸ் பானு, காரியாபட்டி : எனக்கு இரு மின் இணைப்புகள் உள்ளன. ஒரு இணைப்பு எனது பெயரிலும், மாடி இணைப்பு என் பெயர், கணவர் பெயரிலும் இருந்தது. ரூ. 150, 200 கட்டணம் செலுத்தினேன். திடீரென ரூ. ஆயிரத்து 500 கட்டணமாக வந்தது. மாடியில் உள்ள மீட்டருக்கு கட்டணம் இல்லை. அதிர்ச்சியானேன். மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, ஒரே பெயரில் இரு இணைப்புகள் இருந்தது ஒன்றாக இணைக்கப்பட்டது. அதனால் கூடுதல் கட்டணம் வரும் என்றனர். பத்துக்கு மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விட்டவர்களுக்கு மாறவில்லை. எனக்கு மாறியது தான் வேதனையாக உள்ளது, இதனை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர், காரியாபட்டி : ஒரு வீட்டில் இரண்டு, அதற்கு மேல் மின் இணைப்புகள் ஒரே பெயரில் இருந்தால் ஒரு இணைப்பாக மாற்றி கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. மாற்றும் பணியின் போது சிலருக்கு மாறியது. தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இனி அதனை நாங்களாக மாற்ற முடியாது. வேறு பெயரில் ரசீது கொடுத்தால் அதனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஒரே இணைப்பாக கருதி கட்டணம் வசூலிப்பதை தவிர வேறு வழி இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !