நிர்வாகிகள் பதவியேற்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் டவுன் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. வருங்கால ஆளுநர் காந்தி தலைமை வகித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தலைவராக சின்னத்தம்பி, செயலாளராக முத்துவேல் ராஜா பொறுப்பேற்றனர். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர்கள் பாலசுப்ரமணியன், ஜெகநாதன், முத்துராமலிங்கக்குமார், நந்தகோபால், சிவக்குமார் ராஜா, சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செயலாளர் முத்துவேல் ராஜா நன்றி கூறினார். அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரோட்டரி நிர்வாகி முத்துராமலிங்க குமார், கண்ணன் ஆகியோர் வீல் சேர், மருத்துவ பரிசோதனை கருவிகளை டாக்டர் காளிராஜிடம் வழங்கினர்.