உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பூணுால் மாற்றும் நிகழ்வு

 பூணுால் மாற்றும் நிகழ்வு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது. இதையொட்டி காலையில் நீர்நிலைகளில் நீராடி கடந்த ஆண்டு அறியாமல் செய்த தீவினைகள் நீங்க சங்கல்பம் செய்து பழைய பூணுாலை கழற்றி முன்னோர்கள், ரிஷிகளை நினைத்து மந்திரங்கள் கூறி வழிபடுவது வழக்கம். குறிப்பாக பிராமணர்கள் வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகும் ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் கருதி தொடங்குகிறது. இதனை ஒட்டி ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயிலில் காலை முதல் ஹோமம் வளர்த்து புதிதாக திருமணமான ராஜூக்கள் சமூக இளைஞர்கள் சம்பிரதாயங்களை கடைபிடித்தனர். அதன்பின் பிராமணர்கள் பூஜை, சந்தியா வந்தனம் செய்து பூணுாலை மாற்றிக் கொண்டனர். இதேபோல் சர்வ சமுத்திர அக்ரஹாரம் பர்வத வர்த்தினி கோயில், தெற்கு சம்பந்தபுரம் தியாக பிரும்ம பஜனை சபை, சுரைக்காய் பட்டி சித்தி விநாயகர் கோயில், மலை முந்தல் விநாயகர் கோயில் பகுதிகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று புதிய பூணுால் அணிந்தனர். ஆண்டாள் கோயிலில் பிராமணர்கள் பூணுால் மாற்றிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை