மதுரை - துாத்துக்குடி ரயில்வே திட்டத்தை துவக்க வேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர்: அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விரைவாக முடித்து ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கிய நீதித்துறை பெண்களின் பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.டில்லியில் யமுனா நதிக்கரையில் தமிழர்கள் வீடுகள் இடிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் இறுதி கட்டத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆளுங்கட்சி தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் என எதிர்கட்சிகள், புதிதாக கட்சி துவங்குபவர்கள் என்பது எப்போதும் சொல்வது தான். தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.மதுரை - துாத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை மீண்டும் துவக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா சான்றிதழ்கள் வழங்காமல் இருப்பது மாநில அரசின் நிர்வாக ரீதியான பிரச்னை, என்றார்.