உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் பேட்டரி குப்பை வாகனங்கள் பயன்படுத்தாமலேயே வீணாகும் பரிதாபம்

திருச்சுழியில் பேட்டரி குப்பை வாகனங்கள் பயன்படுத்தாமலேயே வீணாகும் பரிதாபம்

திருச்சுழி: திருச்சுழி அருகே ஊராட்சிகளுக்கு வழங்க இருக்கும் பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாக உள்ளது.திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எம்.ரெட்டியபட்டியில் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சியை சேர்ந்த முத்துராமலிங்கபுரம், மேலையூர் ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ள பேட்டரியால் இயங்கும் வாகனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி 2 குப்பை வாகனங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. குப்பை வண்டிகள் வந்து 2 ஆண்டு காலம் ஆகியும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமலேயே காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.இதுகுறித்து திருச்சுழி இந்திய கம்யூ.,் ஒன்றிய செயலாளர் செல்வம், கூறியதாவது : குப்பை வண்டிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு ஏன் வழங்கவில்லை என்று கேட்டதற்கு,பேட்டரிகள் இன்னும் வரவில்லை என அதிகாரிகள் பதில் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளாக பேட்டரி இல்லாமலேயே வாகனங்கள் பயன்பாட்டுக்கு வராமலும் சேதம் அடைந்து விட்டன. உடனடியாக குப்பை வண்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை