உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் திரியும் மனநலம் பாதித்தவர்களால் lகாப்பகத்தில் வைத்து பராமரிப்பது அவசியம்

ரோட்டில் திரியும் மனநலம் பாதித்தவர்களால் lகாப்பகத்தில் வைத்து பராமரிப்பது அவசியம்

ராஜபாளையம்: மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, கோயில், சுற்றுலா தலங்களில் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மீது கல்வீசுதல், அருவருக்கதக்க செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை மனநல காப்பகங்களில் சேர்த்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக குடும்ப சூழல், ஏமாற்றம், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுக்காமல் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்டு ரோட்டில் சுற்றித் திரியும் அவல நிலை உள்ளது. இவர்கள் உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் பராமரிப்பின்றி தெருக்களிலும், கடைகள் முன்பும், பஸ் ஸ்டாப்களிலும், கோயில் வாசல்களிலும் உறங்குகின்றனர். மனநிலை பாதிப்பால் தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிவது, கையில் கம்பு, கற்கள் போன்றவற்றை வைத்து அச்சுறுத்துவதுடன் சில நேரம் உடைகள் இன்றி சுற்றி திரிவதும் நடக்கிறது. இந்நிலையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துர், ராஜபாளையம், சேத்துார், சத்திரப்பட்டி தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் சுற்றித் திரியும் 20க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் சுற்றித்திரியும் இவர்களை மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை உணவு, வழங்கி முறையாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை