நகை கடன் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்
சிவகாசி: நகை கடன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன், என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.சிவகாசியில் தனது கட்சி மாவட்டச் செயலாளர் ராஜபாண்டி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: பா.ஜ.,, அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த முறை நிடி அயோக் கூட்டத்திற்கு முதல்வர் சென்றது அரசியல், தேர்தல், ஓட்டு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.நகை கடன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என த.மா.கா., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கின்ற வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.