உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் நிரம்பின கண்மாய்கள் மம்சாபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் நிரம்பின கண்மாய்கள் மம்சாபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையினால் மம்சாபுரத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையினால் பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு மம்சாபுரத்தில் உள்ள முதலியார் குளம், வாழைக்குளம், வேப்பங்குளம், அமுத குளம், இடையன்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பியது. வாழைகுளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் முக்கால்வாசி அளவிற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அச்சம்தவிழ்த்தான் வடகரை கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 32 கண்மாய்கள் உள்ள நிலையில் தற்போது 5 கண்மாய்கள் நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை வறண்டு கடந்த நிலையில் தற்போது அனைத்து கண்மாய்களும் நிரம்பியதால் மம்சாபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை