மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
26-Jun-2025
விருதுநகர்:விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜூன் 16ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முதல் கால யாகசாலை பூஜைகள் 24ல் துவங்கி தொடர்ந்து 6 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், புதிதாக கட்டப்பட்ட விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகிய கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம்நடந்தது. இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடந்தது.கோயில் மேனேஜிங் டிரஸ்டி, பொருளாளர் ராமதாஸ், தலைவர் ரத்தினக்குமார், உப தலைவர்கள் நாகராஜன், மனோகரன், செயலாளர் சந்திரசேகரன், உதவி பொருளாளர் ராஜகுருவன், தக்கார் கண்ணன், செயல் அலுவலர் ராமதிலகம், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், அர்ச்சகர்கள் பாலாஜி பட்டர், கைலாச பட்டர், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மகேஸ் பேக்கரி உரிமையாளர், ஸ்ரீவித்யா கல்லுாரி சேர்மன் திருவேங்கடராமானுஜதாஸ், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் விஜயக்குமரன், லட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் கண்ணன், மேனகை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கண்ணன், தனசக்தி சுவீட்ஸ் உரிமையாளர் சக்திவேல் பங்கேற்றனர். ட்ரஸ்ட் நிர்வாகிகள், மாலைப்பேட்டை பஞ்சு வியாபாரிகள் சங்கம், திருமறை மன்றத்தினர் கும்பாபிஷேக திருப்பணி ஏற்பாடுகளை செய்தனர்.
26-Jun-2025