வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்--
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் சங்க பொருளாளர் சதீஷ்குமார் குறித்து அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட முத்துகிருஷ்ணனை கைது செய்யாத போலீசாரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் வழக்கறிஞர்கள் இரண்டாம் நாளாக நேற்று, சர்ச் சந்திப்பில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் ராஜையா, உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.