உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசு நிறைவேற்ற கோரியும் நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். நீதிமன்ற வாசலில் 80க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள்பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.*ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தாக்குதல் செயலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்திட வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ