உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டில் 44 கடைகளின் குத்தகை ரத்து

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டில் 44 கடைகளின் குத்தகை ரத்து

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான கிழக்கு பகுதியில் ரூ.3.25 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக 44 கடைகளின் குத்தகையை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்து, கடைகளை காலி செய்து தர உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதியில் உள்ள 44 கடைகளை இடித்து விட்டு கலைஞர் நகப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 3.25 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை இடிக்க வந்த போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து முறையாக நோட்டீஸ் கொடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தற்போது 44 கடைகளின் குத்தகையை ரத்து செய்து, மூன்று நாட்களில், உரிமையாளர்கள் தாங்களாகவே கடைகளை காலி செய்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்படும் கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை