உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்துாரில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாயத்தேவன்பட்டியில் மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.மாயத்தேவன் பட்டியில் உள்ள குரு லட்சுமி பயர் ஒர்க்சில் நேற்று மாலை பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்பிய நிலையில் இரவு 8:30 மணிக்கு மின்னல் தாக்கியது. இதில் பட்டாசு அட்டை பெட்டிகள் வைத்திருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.'இட்லி கடை' கூடாரங்கள் சேதம்நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' சினிமா படப்பிடிப்பிற்காக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அனுப்பபட்டியில் ரோட்டின் இருபுறமும் 20 க்கும் மேற்பட்ட தகர செட்டுகளுடன் கூடிய கடைகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது படப்பிடிப்பு நடக்கவில்லை. நேற்று இரவு 7:00 மணிக்கு அப்பகுதியில் தீ பற்றியது. ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை