மேலும் செய்திகள்
வெப்படை அருகே வெறிநாய் கடித்து மூன்று ஆடுகள் பலி
05-Oct-2025
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் வெறி பிடித்த தெரு நாய்கள் வீடுகளுக்கு முன்பு கட்டி உள்ள ஆடு, மாடுகளை கடித்து குதறுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். பாலையம்பட்டி கிழக்கு தெரு, சர்ச் தெரு உள்ளிட்ட தெருக்களில் வீடுகளுக்கு முன்பு ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு வீடுகளுக்கு முன்பு கட்டி வைத்துள்ள 4 ஆடுகளை இரவில் தெரு நாய்கள் கடித்தன. இதேபோன்று ஒரு மாட்டையும் நாய்கள் கடித்துள்ளன. நேற்றும் 4 ஆடுகளை கடித்து குதறியுள்ளன. தொடர்ந்து கால்நடைகளை நாய்கள் கடிப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வெறிபிடித்த தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Oct-2025