ஆண்டாள் கோயிலில் மகாராஷ்டிரா கவர்னர் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்துார்:நேற்று மாலை 5:40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும்வந்தனர். முதலில்அகோபில மடத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயிலுக்கு வந்த கவர்னரை கோயில் நிர்வாகத்தின் சார்பில் பட்டர்கள் வரவேற்றனர். கொடி மரத்தை வணங்கி பிரகாரம் சுற்றி வந்து ஆண்டாள், ரங்க மன்னார், தங்க விமானம், ஆண்டாள் அவதார ஸ்தலங்களில் சுவாமி தரிசனம் செய்தார்.