உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்பு இல்லாத குளியல் தொட்டி

பராமரிப்பு இல்லாத குளியல் தொட்டி

திருச்சுழி,: திருச்சுழி அருகே குருணைகுளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டி பராமரிப்பு இல்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குருணை குளம். இங்குள்ள மக்கள் குளிக்கும் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் குளியல் தொட்டி கட்ட முடிவு செய்தது. கண்மாய் அருகில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. மக்கள் சில மாதங்கள் பயன்படுத்திய வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்யாததால், குளியல் தொட்டியில் பாசம் பிடித்து வழுக்கி விழும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் குளிக்க இங்கு வருவது இல்லை. தொட்டியில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட முடியாமல் கருப்பு கலரில் உள்ளது. தண்ணீர் வசதி நன்கு இருந்தும் பராமரிப்பு இல்லாமல் தொட்டி இருப்பதால் மக்கள் இங்கு குளிக்க தயங்குகின்றனர். தற்போது குளியல் தொட்டி கழிப்பறையாக மாறி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் குளியல் தொட்டியை முறையாக பராமரித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி