உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்பு இல்லாத வாக்கி டாக்கிகள்

பராமரிப்பு இல்லாத வாக்கி டாக்கிகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டேஷன், பாதுகாப்பு, ரோந்து பணியில் உள்ள ஏட்டு முதல் உயர் அதிகாரிகள் வரை உள்ளவர்களை மாவட்ட போலீஸ் அதிகாரி தொடர்பு கொள்ள வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒவ்வொரு பணிநிலைக்கு ஏற்ப மைக் நம்பர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றனர்.இந்நிலையில் போலீசாருக்கு வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டு பல ஆண்டுகளாவதால் அவ்வப்போது அதில் ஏற்படும் சிறு, சிறு பழுதுகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.இதில் ஸ்டேஷன் பணியில் உள்ள வாக்கி டாக்கிகள் பெரும்பாலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் எப்போதும் சார்ஜிங் பாயிண்ட்டில் இணைப்பு செய்த படி வாக்கி டாக்கிகளை போலீசார் வைத்து உபயோகித்து வருகின்றனர்.எனவே அடிக்கடி பழுது ஏற்படும்வாக்கி டாக்கிகளுக்கு பதிலாக புதிய வாக்கி டாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்ற்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ