உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது

மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது

காரியாபட்டி: காரியாபட்டி உவர்குளத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக செந்தாமரை கண்ணனுக்கும் 35, கருணாகரனுக்கும்21, முன் விரோதம் இருந்தது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கிராமத்தினர் சமரசம் செய்வர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.30க்கு இருவரும் அங்குள்ள கண்மாய் கரையில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் செந்தாமரை கண்ணனை, கருணாகரன் கத்தியால் குத்தி கொலை செய்து, தப்பி ஓடினார். நரிக்குடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி