உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர் பலி

 பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர் பலி

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாயில்பட்டியில் வீட்டில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்த மைக்கேல் ராஜ் 60. சிகிச்சை பலனின்றி பலியானார். தாயில்பட்டி எஸ்.பி. எம். தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் , தாயில்பட்டி அம்பேத்கர் நகரில் இவரது வீட்டிற்கு பின்புறம் தகர செட்டில் சோல்சா வெடி தயாரித்தார். போலீசார் சோல்சா வெடிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். செப்.,21 ல் சட்டவிரோத மாக அமைத்திருந்த தகர செட்டை மைக்கேல் ராஜ் அகற்றிய போது அங்கு சிதறி கிடந்த கழிவு பட்டாசுகள், மூலப்பொருட்களில் தீ பற்றியது. இதில் மைக்கேல்ராஜ் படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை