உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்க முயன்றவர் கைது

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்க முயன்றவர் கைது

விருதுநகர் : சிவகாசியைச் சேர்ந்த ராம்நிவாஸ் லக்கோட்டியாவின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்ற பரமசிவத்தை 44, போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்நிவாஸ் லக்கோட்டியா. இவர் தொழில் தொடர்பாக சிவகாசிக்கு வந்தவர் தற்போது குடும்பத்துடன் இங்கேயே வசித்து வருகிறார். இவர் வாங்கிய நிலத்தில் தனக்கு உரிமை இருப்பதாக அப்பகுதி பரமசிவம் என்பவர் கூறி இடையூறு செய்து வந்ததால் ராம்நிவாஸ் லக்கோட்டியா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணையில் ராம்நிவாஸ் லக்கோட்டியா வாங்கிய நிலத்தின் அருகே உள்ள நில உரிமையாளர் பரமசிவம், அந்நிலத்தை அபகரிப்பதற்காக போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பரமசிவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை