உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரிய மாரியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

பெரிய மாரியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களான நிலையில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா, மகா சண்டி ஹோமம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:00மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை 6:30 மணிக்கு மேல் சண்டி ஹோமம் கன்னிகா பூஜை, கோ பூஜை, மகா பூர்ணா ஹுதி நடந்தது. பின்னர் கடம் புறப்பாடு செய்யப்பட்டு கும்ப மற்றும் கலசாபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ