உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருதுபாண்டியர் ஜெயந்தி உயர்நீதிமன்றம் அனுமதி

மருதுபாண்டியர் ஜெயந்தி உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் மருது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் ஜெயந்தியையொட்டி என்.முக்குளம் முதல் நரிக்குடி மருதுபாண்டியர் கோயில்வரை இன்று (அக்.,27) முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடத்த, பொங்கல் வைக்க அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி கே.முரளிசங்கர்:சுதந்திரப் போராட்ட தியாகிகள் மருதுபாண்டியர்களின் விழாவை சமுதாய வண்ணம் பூசாமல் கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமை, நல்லிணக்கம் உறுதி செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு கொண்டாடுவதை அனைவரும் வரவேற்பர்.நிபந்தனைகளுக்குட்பட்டு நரிக்குடி போலீசார் மருதுபாண்டியர் ஜெயந்தி நடத்த அனுமதி வழங்க வேண்டும். முளைப்பாரி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ