இன்று நேர்வழியில் மயிலாடுதுறை ரயில்
விருதுநகர்:செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848) இன்று (ஏப். 10) வழக்கமான பாதையில் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மதுரைக் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848) ஏப். 10ல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.இன்று காலை 6:55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.