உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகால்களில் இறைச்சி கழிவுகள்

வாறுகால்களில் இறைச்சி கழிவுகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் இறைச்சி கழிவுகளை ரோட்டோரம் சாக்கடைகளில் கொட்டி வருவதை கண்டு கொள்ளாததால் இப்பிரச்சனை தொடர்ந்து வருகிறது. நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இறைச்சி விற்பனை கடைகள் பல மடங்கு பெருகி வருகிறது. இவற்றை வெட்டி விற்கும்போது இவற்றில் இருந்து வெளியேற்றும் தேவையற்ற கழிவுகள் நோய் தொற்றை அதிகரிக்கும். புதிதாக கறி கோழி, இறைச்சி கடைகள், மீன் விற்பனை இடங்கள் போன்றவை எந்த விதியையும் பின்பற்றாமல் நடந்து வருகிறது. இவற்றின் கழிவுகளை சுலபமாக வெளியேற்றும்விதமாக நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகள்,நீர்நிலைகள் அருகே அமைத்து கழிவுகளை கொட்டி வருகின்றனர்.இவற்றை தேடி உண்ணும் பறவைகள் நாய்கள் மூலம் தொற்றுக்குவழி ஏற்படுகிறது. ராஜபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் இறைச்சி கழிவுகள் ரோட்டோரம், ஓடைகளில் வெளியேற்றுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !