உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் மிலாடி நபி தொழுகை

விருதுநகரில் மிலாடி நபி தொழுகை

விருதுநகர்: விருதுநகரில் மிலாடி நபியை முன்னிட்டு உதய தின விழா, தொழுகை நடந்தது. கமிட்டி தலைவர் ஹபீப் முகமது தலைமை வகித்தார். மஸ்ஜிதே ரஹ்மத் ஜூம்ஆ பள்ளி வாசல் ஜமாத் சதக்கத்துல்லாஹ், ரோஜா நகர் பள்ளிவாசல் தலைவர் ஹபிபத்துபல்லாஹ், பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர், கல்பள்ளிவாசல் ஜமாஅத் அப்துல் வஹாப், சின்ன பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நுாருல்அமீன், கூரைக்குண்டு மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் ஹபீப் முகமது, மதீனா பள்ளிவாசல் ஜமாத் காட்டுபாதுஷா முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி இமாம் அப்துர்ரஹ்மான் பேசினார். கூரைக்குண்டு மவுலானா முஹம்மது காசிம் யூசுபி தொழுகை நடத்தினார். அனைத்து ஜமாத்தார்களும் பங்கேற்றனர். துாய்மை பணியாளர்கள், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை