அகழாய்வில் அணிகலன் அதிகளவில் கண்டெடுப்பு
சிவகாசி,:விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டன.இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை தோண்டப்பட்ட, 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3,360 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளன.அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''சங்கு வளையல்கள், அணிகலன்கள், கண்ணாடி மணிகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. முன்னோர்கள் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்,'' என்றார்.