மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கு விவசாயிக்கு 6 ஆண்டு சிறை
01-Jul-2025
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே ஜக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் 90, வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை. இவரது மகன் சிவலிங்கம் 52. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.சிவலிங்கம் விவசாய பணிக்காக வீட்டில் பாட்டிலில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துள்ளார். கிருஷ்ணம்மாள் குளிர்பானம் என நினைத்து அதை குடித்து மயங்கினார்.வீட்டிற்கு வந்த சிவலிங்கம் தாய் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து தானும் விஷத்தை குடித்தார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணம்மாள் பலியானார். சிவலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறார்.
01-Jul-2025