தன்னார்வ அமைப்புகள் பள்ளிகளை பராமரிக்கலாம் எம்.பி., அழைப்பு
விருதுநகர்: விருதுநகரில் நடந்த வளர்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் பள்ளிகளை பராமரிக்க தன்னார்வ அமைப்புகளைவரவேற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை படுகொலை செய்யும் அளவுக்கு மத்திய அரசு செயல்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை தத்தெடுத்து பராமரித்து வெள்ளை அடித்தல், பழுது பார்த்தல் போன்ற சீரமைப்பு பணிகளை செய்ய தன்னார்வ அமைப்புகளை வரவேற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு உதவலாம்.ராஜபாளையம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் பால பணிகள் அடுத்தாண்டு ஆக. ல் முடியும். பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்சனை வந்துள்ளது. 4 நாட்களில் மூன்று முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலை நிறுத்தி மத்தியஸ்தம் செய்ததாக கூறியுள்ளார், என்றார்.