உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

காரியாபட்டி : காரியாபட்டி மேலத்துலுக்கன்குளம் காளியம்மன் கோயில் ஐப்பசி பொங்கல் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கரகம், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். சாமி பாடல்கள், கும்மி பாடல்களுக்கு சிறுமியர்கள், பெண்கள் நடனமாடி கும்மி அடித்தனர். மேல தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது.அம்மன் உருவ முளைப்பாரி, காளியம்மன், மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், காவடி முளைப்பாரி, வேல் முளைப்பாரி, சூலாயுதம் முளைப்பாரி, நவதானிய முளைப்பாரி உட்பட 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் எடுத்துச் சென்றனர். பெருமாள் கோயில் ஊருணியில் தீப ஆராதனை காண்பித்து கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி