மேலும் செய்திகள்
அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு
07-Oct-2025
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலில் கடந்த வாரம் காப்பு கட்டுடன் பொங்கல் விழா துவங்கிய நிலையில் நேற்று காலை 6:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 12:15 மணிக்கு கோயிலை வந்தடைந்தது. பின்னர் தேரில் இருந்து அம்மன் கோயிலில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் முளைப்பாரி வழிபாடும், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
07-Oct-2025