மேலும் செய்திகள்
பரமக்குடியில் இயற்கை சந்தை
07-Feb-2025
நரிக்குடி, : நரிக்குடி ஆனைக்குளத்தில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை சந்தை துவக்க விழா நடந்தது. கிராமப்புற மகளிர் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை சொந்த ஊரிலே சந்தைப்படுத்தி விற்பனை செய்யவும், வருமானத்திற்கு வழிவகை செய்யும் நோக்கில் இயற்கை சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் ஆனைக்குளத்தில் ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் உமா, வனிதா, செல்வராணி இயற்கை சந்தைக்கு ஏற்பாடு செய்தனர். மாவட்ட வள பயிற்றுநர் சீமைச்சாமி, வட்டார மேலாளர் சோனை முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Feb-2025