உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அழகாபுரியில் இல்லை அடிப்படை வசதிகள்: பயணிகள் தவிப்பு

அழகாபுரியில் இல்லை அடிப்படை வசதிகள்: பயணிகள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்:வத்திராயிருப்பு தாலுகா அழகாபுரியில் பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம், இருக்கைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அழகாபுரியை சுற்றி வடுகபட்டி, கோவிந்தநல்லூர், வெள்ளபொட்டல், கரிசல் குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் தினமும் மதுரை ,தேனி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கின்றனர். இந்நிலையில் இங்கு இருக்கை வசதி, பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வெயிலுக்கும், மழைக்கும் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடைகளே, மழைக்காலத்தில் மக்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்கிறது. எனவே, அழகாபுரியில் அனைத்து அடிப்படைகளும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை