உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சப் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட்

சப் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட்

சிவகாசி : சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் ஆர்.ஓ., பிளான்ட் செயல்படாததால் மக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வருகின்ற மக்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தின் முன்புறம் குடிநீர் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த ஆர்.ஓ., தற்போது செயல்படவில்லை. இதனால் அலுவலகத்திற்கு வரும் மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பட்சத்தில் குடிநீருக்காக நீண்ட தொலைவில் உள்ள கடைகளுக்கு அலைய வேண்டியுள்ளது. எனவே குடிநீர் ஆர்.ஓ., பிளான்டினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !