உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை சமூக நீதி கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் நலனுக்கு எதிராகவும் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதை கண்டித்து மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், மாநில பொருளாளர் சுப்புக்காளை பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி