| ADDED : நவ 17, 2025 02:12 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் சீட்ஸ் தொண்டு நிறுவனம் கட்டங்குடி கிராம இளைஞர்கள் இணைந்து அரசு புறம்போக்கு, தனியார் நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, பயன் தரும் மரங்கள் நடும் பணி நடந்தது. கிராமத்தைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடுவதாக முயற்சி எடுத்து அதன் முதற்கட்டமாக வேலுச்சுவாமி கோயில் ஊருணி அதன் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. இதில் காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், தொண்டு நிறுவன மேலாளர் சிவக்குமார், கட்டங்குடியை சேர்ந்த நாராயணன், ராம்குமார் உள்ளிட்ட தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.