சாத்துார் தெருக்களில் ஆக்கிரமிப்பு
சாத்துார்: சாத்துார் நகரில் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். குலாலர் தெரு ,தென் வடல் புது தெரு ,முருகன் கோயில், தெருமாரியம்மன் கோயில் தெருக்கள்,நகரில் உள்ள பிரதான தெருக்களாகும். இந்த தெருக்களில் அதிக அளவு மக்கள் வசித்து வருகின்றனர். 40 அடி அகலம் கொண்ட இந்த தெருக்களில் தற்போது ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் 20 அடி அகலம் கொண்ட தெருக்களாக மாறிவிட்டன. இப்ப பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் வாகனங்களை கொண்டு செல்வதற்காக ரோடு வரை சிமெண்ட் தரைதளம் அமைத்து உள்ளனர். மேலும் பலர் வீடுகள் கடைகளுக்கு மாடிப்படிகளை தெருக்களில் கட்டி உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் தெருக்களின் அகலம் குறைந்து வருகிறது. முக்கிய தெருக்களுக்குள் விபத்து ஏதும் ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடதீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் வாகனம் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் முறையாக சர்வே செய்து தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவான பாதையை உருவாக்கிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.