உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் பலத்த காயம்

காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் பலத்த காயம்

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில்ஒருவர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து புகார் தெரிவித்துஉள்ள நிலையில் மனிதரையும் காட்டுப்பன்றி தாக்கியுள்ளதால் கட்டுப்படுத்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சி நரிக்குளம் செந்தட்டிகாளை மகன் முத்துராமலிங்கம் 47, கட்டட தொழிலாளி. மீதி நேரங்களில் ஆடுகள் மேய்ச்சலுக்கு விட்டு பராமரித்து வருகிறார். நேற்று நரிக்குளம் கண்மாயையொட்டிய தரிசு நிலத்தில் நடந்து சென்ற போது புதரில் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி திடீரென முத்துராமலிங்கத்தை விரட்டியதில் தடுமாறி கீழே விழுந்தவரை தாக்கியதில்தொடை, இரண்டு கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ