உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையின் மருந்தகத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறப்பு காத்திருப்பை குறைக்க புது முயற்சி

விருதுநகர் அரசு மருத்துவமனையின் மருந்தகத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறப்பு காத்திருப்பை குறைக்க புது முயற்சி

விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவமனையின் மருந்தகத்தில் தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக கூடுதலாக இரண்டு தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்துகள் வாங்க நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் இருந்து மேல்சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் அரசு மருத்துவமனையின் முதல் தளத்தில் இயங்கும் மருந்தகத்தில் காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக மருத்துவமனை முதல் தளத்தின் கிழக்கு பகுதியில் ஆண், பெண் தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு புதிதாக மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மாதமாத்திரை, மனநலம், சர்க்கரை வியாதி, தொற்றா நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.இதன் மூலம் ஏற்கனவே இருந்த 6 கவுன்டர்கள், தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 2 கவுன்டர்கள் சேர்த்து மொத்தம் 8 கவுன்டர்களில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையின் மருந்தகத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ