உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அஞ்சலகங்களில் இன்டர்நெட் பேங்கிங் பெறுவதற்கான மேளா

அஞ்சலகங்களில் இன்டர்நெட் பேங்கிங் பெறுவதற்கான மேளா

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அஞ்சலகங்களில் பொதுமக்கள் அலைபேசி, ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் 'மொபைல் பேங்கிங்', 'இன்டர்நெட் பேங்கிங்' சேவைகள் பெறுவதற்கான சிறப்பு மேளா நடக்கிறது. அஞ்சலகங்களில் புதிதாக சேமிப்பு கணக்கு துவங்குபவர்கள், சேமிப்பு கணக்கு ஏற்கனவே வைத்திருப்பவர்கள், 'மொபைல் பேங்கிங்', 'இன்டர்நெட் பேங்கிங்' மூலம் அஞ்சலக ஆர்.டி., பி.பி.எப்., எஸ்.எஸ்.ஏ.,ல் அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் பணம் செலுத்தும் வசதி, அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் டி.டி., கணக்கு ஆரம்பிப்பதற்கான வசதி மொபைல் பேங்கிங் மூலம், அஞ்சலக ஆர்.டி., பி.பி.எப்.,ல் அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் பணம் செலுத்தும் வசதி ஆகியவற்றை பெறலாம்.சிறப்பு முகாம்களில் அடல் பென்சன் திட்டம் ரூ.20க்கு விபத்து காப்பீடு திட்டம், ரூ.436க்கு காப்பீடு திட்டம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தலைமை, துணை கிளை அஞ்சலகங்களில் செய்யப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த மேளாவில் பங்கேற்று கணக்கு துவங்கி பயன்பெற வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை