உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சமுசிகாபுரம் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு--

சமுசிகாபுரம் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு--

சத்திரப்பட்டி: ராஜபாளையம் நகராட்சியோடு சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சமுசிகாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு நெசவாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, இ.கம்யூ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ., சோமசுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி., முத்து மாரி, முன்னாள் சமுசிகாபுரம் ஊராட்சி தலைவர் ராஜகோபால், பா.ஜ., சார்பில் வெள்ளைச்சாமி, சத்திரப்பட்டி காங்., தலைவர் லட்சுமண பெருமாள், பா.ம.க., காளிதாஸ், நா.த., த.வெ.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சமுசிகாபுரம் ஊராட்சியை மக்களின் ஒப்புதல் இன்றி நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம், ஜன.10ல் ஊராட்சி ஒன்றியம் முன்பு அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் வரிகள் உயர்த்தப்படுவதுடன், 100 நாள் வேலை திட்டம்ரத்து செய்யப்படும், கிராமத்திற்கான சுய உரிமைகள் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்தனர். நெசவாளர் சங்க பொதுச்செயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை