உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

சத்திரப்பட்டி: ராஜபாளையம் நகராட்சி உடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சமுசிகாபுரம் ஊராட்சி. ராஜபாளயைம் நகராட்சியுடன் இந்த ஊராட்சியை இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர், கிராம மக்கள் நேற்று காலை சமுசிகாபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தாசில்தார் ராமசுப்பிரமணியன், டி.எஸ்.பி., ப்ரீத்தி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை