உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெல் அறுவடை பணிகள் தீவிரம்

நெல் அறுவடை பணிகள் தீவிரம்

சேத்துார்: ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழையால் அறுவடை பணிகள் முடங்கி இருந்த நிலையில் நேற்று மீண்டும் துவங்கியது. அறுவடை இயந்திரம் வாடகை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், சேர்வராயன் குளம் உள்ளிட்ட பாசன பகுதியில் மூலம் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பாசன விவசாயம் நடைபெறுகிறது. தற்போது 2ம் போக சாகுபடிக்கான அறுவடை தீவிரமடைந்து வந்த நிலையில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதியில் நான்கு இடங்களில் திறக்கப்பட்டன.இதனிடையே ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் 10 நாட்களாக தொடர் சாரல் மழை பெய்ததால் அறுவடை பணிகள் முடங்கியதுடன் 50க்கும் அதிகமான அறுவடை இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அறுவடை பணிகள் மீண்டும் துவங்கியது. மதுரை, சோழவந்தான், டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயந்திரங்கள் குவிந்து வருவதால் ஒரு மணி நேரம் அறுவடைக்கான வாடகை பெல்ட் வண்டிக்கு கடந்த அறுவடையை விட ரூ.500 குறைந்து 2,500ம், டயர் வண்டிக்கு 2 ஆயிரத்தில் இருந்து, 1,700க்கு குறைந்துள்ளது. மணிக்கு ரூ.500 வரை மீதமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !