உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியானார்.அருப்புக்கோட்டை மணி நகரம் பொன்னையா தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், 29, இவர் நேற்று மாலை செவல் கண்மாய் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை