உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகாலில் தவறி விழுந்து ஊராட்சி செயலாளர் பலி

வாறுகாலில் தவறி விழுந்து ஊராட்சி செயலாளர் பலி

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் 52, வாறுகாலில் தவறி விழுந்து பலியானார்.சாத்துார் செட்டுடையான் பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 52. திருமணம் ஆனவர். குழந்தை இல்லை. வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு மது போதையில் படந்தால் ரோட்டில் உள்ள சாக்கடை வாறுகால் மீது படுத்திருந்த போது நிலை தடுமாறி வாறுகாலில் விழுந்து பலியானார்.அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காககொண்டு சொல்லப்பட்டது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி