மேலும் செய்திகள்
அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
22-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, தேனி, கோவை, சென்னை நகரங்களுக்கு செல்லும் வகையில் நேரடி பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் தலா ஒரு நகராட்சி, பேரூராட்சி, 29 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினமும் விருதுநகர், மதுரை, தேனி, கோவை, திருப்பூர், சென்னை நகரங்களுக்கும் பயணித்து வருகின்றனர். ஆனால், ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து நேரடியாக புறப்படும் வகையில் பஸ்கள் இல்லாததால் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களில் தான் பயணிக்கின்றனர். இதனால் வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்வதில் பஸ்களில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணிக்கின்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும் ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தவிர்க்க ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் மதுரைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை விருதுநகர், தேனி நகரங்களுக்கும், இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றடையும் வகையிலும், இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர் சென்றடையும் வகையிலும் நேரடி பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-
22-Sep-2025