உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாம்பரம்--திருவனந்தபுரம் ஏ.சி., சிறப்பு ரயில் நிரந்தரமாக இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

தாம்பரம்--திருவனந்தபுரம் ஏ.சி., சிறப்பு ரயில் நிரந்தரமாக இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்பட்டு மதுரை, விருதுநகர், தென்காசி, கொல்லம் வழியாக திருவனந்தபுரம் வரை இயங்கும் ஏ.சி. சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.சில மாதங்களாக தாம்பரத்திலிருந்து (ரயில் எண்.06035) வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்,ராஜபாளையம், தென்காசி, தென்மலை, புனலூர், கொல்லம் வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம்சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு ரயில்வே ஸ்டேஷனில்இருந்து (ரயில் எண்.06036) ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 3:25 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் காலை 7:40 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையிலும் ஒரு ஏ.சி. சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த ரயிலின் சேவை முடிவடையும் நிலையில் ஒரே ஒரு தடவை மட்டும் கூடுதல் டிரிப்பாக ஜூன் 6ல் தாம்பரத்தில் இருந்தும், ஜூன் 8ல் திருவனந்தபுரம் வடக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துஉள்ளது.தமிழக, கேரள மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று ரயில்வேக்கு அதிக வருவாயை பெற்றுத்தரும் இந்த ரயிலை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டுமென தமிழக, கேரள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி