உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி

சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இருக்கன்குடி ,கோட்டூர் மாரியம்மன் , குருசாமி கோயிலுக்கு தென் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சாத்துார் வந்து மேற்கண்ட ஊர்களுக்கு சென்று கோயிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ் ஸ்டாண்ட் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் பஸ்சுக்காக நின்று கொண்டு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்டில் வடக்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் மட்டும் நான்கு 4 சிமெண்ட் இருக்கைகள் உள்ளன. இவை நிரம்பி வழிவதால் பயணிகள் அமர போதுமான இருக்கைகள் இல்லை.இதன் காரணமாக பிளாட்பாரத்தையும் ஓரத்திலும் பிளாட்பாரம் துாண்களிலும் உட்கார்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.மேலும் இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கி முதியவர்கள் மயக்கம் அடையும் நிலையும் உள்ளது. மேலும் பிக் பாக்கெட் திருடர்களும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசையை காட்டி வருகின்றனர். நீண்ட துாரத்திலிருந்து பயணம் செய்து வரும் பயணிகளின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக தற்காலிக இருக்கைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ