ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் தர்ணா போராட்டம்
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதலான ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மேற்கு மாவட்ட தலைவர்கள் அலிபாத், உலகநாதன், செயலாளர்கள் சுவிசேசமுத்து, செல்வின் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், பல்வேறு ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் முருகாயி, ஜானகி, லட்சுமி, ராமச்சந்திரன், ராமராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் மாயமலை பேசினர்.