உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி பஸ் டிப்போவை நிரந்தரமாக்க மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி பஸ் டிப்போவை நிரந்தரமாக்க மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி: நீண்ட நாள் கனவான, காரியாபட்டி பஸ் டிப்போவை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் 12 ஆண்டுகளுக்கு முன் பஸ் டெப்போ தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் காரியாபட்டியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு எளிதில் பஸ் இயக்க ஏதுவாக இருந்து வருகிறது. இங்குள்ள டிப்போ வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. நீண்ட நாட்களாக நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. இதுவரை அதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.அப்போது இந்த டிப்போவுடன் மாநிலத்தில் 7 இடங்களில் துவக்கப்பட்டது. மற்ற இடங்களில் நிரந்தரமாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. காரியாபட்டி டெப்போ மட்டும் இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏராளமான அரசு நிலங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து பஸ் டெப்போ துவக்கலாம். இங்கு டெப்போ நிரந்தரமாக அமையும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையில் பஸ்கள் கிடைக்கும். பல்வேறு கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்களை இயக்க முடியும்.தடையின்றி பயணிகள் எளிதில் சென்று வர வாய்ப்பு உள்ளது. தற்போது வாடகை இடத்தில் இயங்கி வரும் டெப்போவில் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது. மழை நேரங்களில் சேறும் சகதியுமாகி படுமோசமாக இருக்கும். தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே நீண்ட நாள் கனவான காரியாபட்டி டெப்போவை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ