உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உரிமம் பெற்று ஐஸ் பார் தயாரிப்பு உறுதி செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

உரிமம் பெற்று ஐஸ் பார் தயாரிப்பு உறுதி செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

விருதுநகர்:கோடை நெருங்கும் நிலையில் குளிர்பானங்களில் ஐஸ் பார் பயன்படுத்தப்படும். உரிமம் பெற்று ஐஸ் பார் தயாரிப்பை உறுதி செய்வதுடன் உணவு பாதுகாப்புத்துறையினர் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.கோடை நெருங்குவதால் இளநீர், பதநீருக்கு இணையாக கரும்பு சாறு, பழ ஜூஸ்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இவற்றில் குளிரூட்டி குடிப்போருக்கு உதவுவது ஐஸ் பார்கள். ஐஸ் பார்களை உரிமம் பெற்று பாதுகாக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி செய்ய வேண்டும். ஏராளமானோர் ஐஸ் பார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறிய அளவில் ப்ரீசர் மட்டும் இருந்தால் போதும் என இவ்வாறு உற்பத்தி செய்கின்றனர். இவர்களில் பலர் முறையாக உரிமம் பெற்றவர்கள் இல்லை. மேலும் ஐஸ் பார் தயாரிக்க பயன்படும் குடிநீர் தரமானதா என உறுதி செய்வதும் அவசியமாக உள்ளது. எப்சாய் உரிமம் பெற்ற மினரல் குடிநீர் நிறுவனத்தில் இருந்து பெற்ற தண்ணீராக இருக்க வேண்டும் அல்லது குளோரின் தெளித்த உள்ளாட்சி குடிநீராக இருக்க வேண்டும். குடிப்பதற்கான பாதுகாக்கப்பட்ட நீரை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் பல உற்பத்தியாளர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. எனவே ஐஸ் பார் தயாரிப்போர் உரிமம் வைத்திருப்பதை உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு நடத்தி உறுதி செய்ய வேண்டும். ஐஸ்கிரீம், ஜூஸ், கரும்புச்சாறு கடை நடத்துவோரும் அதை உறுதி செய்த பின்பே உணவுப்பொருட்களில் ஐஸ் பார்களை பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ